மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடக்கம் குறித்து அமைச்சர் சென்ன தகவல்...!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி தொடக்கம் குறித்து அமைச்சர் சென்ன தகவல்...!

மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் தான் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சூரியம்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இயேசுவே நித்திய ஜீவன் சர்ச் பாதிரியார் நித்தியானந்தம், வனிதா, புண்ணியகோடி, நித்தியா, ஆறுமுகம் ஆகிய ஐந்து பேர் தீக்காயம் அடைந்தனர்.  அவர்கள் அனைவரும், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிக்க : அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி... மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோடு வருகை...!

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதே மாணவர்கள் படிப்பதற்கும், பொதுமக்களின் மருத்துவ சிகிச்சைக்காகவும் தான் என விளக்கமளித்த சுப்பிரமணியன், மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் தான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார்.