”டெல்லியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதே அதிமுகவின் வேலை.....” அமைச்சர் முத்துசாமி!!!

”டெல்லியின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதே அதிமுகவின் வேலை.....” அமைச்சர் முத்துசாமி!!!

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இல்லை என அமைச்சா் முத்துசாமி தொிவித்துள்ளாா். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதாித்து அமைச்சா் முத்துசாமி மணல்மேடு பகுதியில் தீவிர வாக்குசேகாிப்பில் ஈடுபட்டாா்.  தொடா்ந்து செய்தியாளா்களிடம், ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தொிவித்த அவா் ஈரோட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏதும் இல்லை என தொிவித்தாா். 

காங்கிரஸ் சட்டமன்ற கொறடா உறுப்பினர் செல்வ பெருந்தகை கூறும்போது, டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்களை நடைமுறைபடுத்துவதுதான் அதிமுகவின் வேலையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் யார்?!!!