அதிமுக ஆட்சியில் கிடப்பில் கிடந்த நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அதிமுக  ஆட்சியில் கிடப்பில் கிடந்த நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்  - அமைச்சர் எ.வ.வேலு

நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகவும் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும், மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற தகவல் தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறினார்.