சட்டப்பேரவையில் விரைவில் அதிமுக திட்ட அறிக்கை விவரம் வெளியிடப்படும்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சட்டப்பேரவை விதி 110ன் கீழ், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவற்றில் செயல்படுத்தப்பட்டவை குறித்து பேரவையில் அறிவிக்க உள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விரைவில் அதிமுக திட்ட அறிக்கை விவரம் வெளியிடப்படும்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சட்டப்பேரவையில் இன்று 2021-22 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி. உதயகுமார், அரசின் நிதிநிலை அறிக்கை, தாய் பூனை, குட்டியை கவ்வுவது போல் அல்லாது எலியை கவ்வுவது போல் இருப்பதாக மறைமுகமாக தாக்கி பேசினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய் மதிப்பையும், 5 வருடத்திற்கு முன்பு இருந்த ஒரு ரூபாய் மதிப்பினையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது என கூறினார்.

மேலும் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காதது, செயல்திறன் குறைவு, உற்பத்தி கடன் ஆகியன அதிகரித்ததன் விளைவாக தான் பண வீக்கம் அதிகமாகியுள்ளதாக பழனிவேல் விளக்கம் அளித்தார். திட்டங்களுக்கான மதிப்பீட்டு தொகையில் 3 அல்லது 4 சதவீதம் மாறுபாடு ஏற்படலாம், ஆனால் 40 சதவீதம் வரை வித்தியாசம் இருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார்.