கேப்டன் இல்லாத கப்பலை போன்று அதிமுக தள்ளாடுகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!

கேப்டன் இல்லாத கப்பலை போன்று அதிமுக தள்ளாடுவதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார்.

கேப்டன் இல்லாத கப்பலை போன்று அதிமுக தள்ளாடுகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ் சாடல்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவினருக்கு கொள்கை இல்லை என்றும், தலைமையும் இல்லை என்ற அவல நிலைக்கு அவர்கள் சென்று கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாஜக ஒரு மண்குதிரை என சாடிய மனோ தங்கராஜ், அவர்களை நம்பினால், மண் குதிரையில் ஆற்றில் இறங்குவதற்கு சமம் எனப் பேசினார்.