கோவை கலெக்டரை மிரட்டிய ஜெயராமன்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சென்று அட்டகாசம்...

கோவையில் கலெக்டரை மிரட்டிய  அதிமுக எம்.எல்.ஏக்கள் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை கலெக்டரை மிரட்டிய ஜெயராமன்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சென்று அட்டகாசம்...
கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொகுதிகளில் அரசு பணி நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும், மத்திய மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகளை ரத்து செய்யக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அ.தி.மு.க எம். எல்.ஏ-க்கள்,முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.
 
அப்போது அந்த மனுவை தனது இருக்கையில் அமர்ந்துகொண்டே ஆட்சியர் சமீரன் வாங்க முயன்றுள்ளார். உடனே ஏன் எழுந்து நின்று வாங்க மாட்டீர்களா' என அதிமுக எம். எல்.ஏக்கள் கேட்க. சுதாரித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று அந்த மனுவை வாங்கினார். அதற்கு பொள்ளாச்சி எம். எல்.ஏ., ஜெயராமன், ''இது மிகவும் தவறு சார். நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன்,'' என மாவட்ட ஆட்சியரைப் பார்த்து கூற ,மேட்டுப்பாளையம் எம். எல்.ஏ., செல்வராஜோ, ''என்ன பழக்கம் இது, புதுப் பழக்கமா இருக்குது,'' என, கோபத்துடன் கூற அந்த இடமே பரபரப்பானது. 
 
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிலர் அதிமுக எம். எல்.ஏக்களையும், சிலர் மாவட்ட ஆட்சியரையும் விமர்சித்து வருகின்றனர்.