4 லட்சம் தடுப்பூசியை வீணாக்கிய அதிமுக அரசு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது ஆனால் தற்போது மிக கவனமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4 லட்சம் தடுப்பூசியை வீணாக்கிய அதிமுக அரசு...  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..
சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் கொரொனா புணர்வாழ்வு கையேட்டை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணத்தை கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
 
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது கிங்ஸ் மருத்துவமனையில் 20 ஆயிரம்  சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளி மாவட்டத்தில் இருந்து கூட கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் கூட கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என பேசினார்.
 
கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் தற்போது நோய் தொற்று முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. கோவிட் பிந்தைய நலவாழ்வு சிகிச்சை மையம் அனைத்து மாவட்டத்திலும் தொடங்கப்படும். மனநல ஆலோசனை, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.3- வது அலை வந்தால் சிறப்பாக எதிர் கொள்ள அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கோடி 50 லட்சம் செலவில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை  திருவாரூரில் தமிழக முதல்வர் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
 
அசாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் 20 கிலோ கோதுமை தருகிறார்கள். பாக்கிஸ்தானில் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துங்கள் என போரட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்திற்கு தற்போது வரையிலும் மொத்தமாக 1,57,76,550 வந்துள்ளது என்றும் தமிழகத்தில் இதுவரை 1,58,78,600 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம். 63,460 தடுப்பூசி  கையிருப்பில் உள்ளது. கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது. ஒரு வயலில் 10 முதல் 12 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக கவனமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1.25 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது.
 
தடுப்பூசி குறித்து சில அரசியல் கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். ஒருநாளைக்கு மூன்று முறை அறிக்கை கொடுக்கிறோம். இதற்கு மேலும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்றால் வெள்ளை பேப்பரில் எழுதிகொடுத்துவிடுகிறோம்.
நாளை மறுநாள் தடுப்பூசி தொடர்பாகவும், எய்ம்ஸ் குறித்து பேச ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க சுகாதாரத்துறை செயலாளருடன் டெல்லி செல்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.