ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு...

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று  தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம்  அறிவித்துள்ளது.  

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு...

1991 - 1996 வரை அதிமுக ஆட்சியின் போது இந்திரகுமாரி சமூக நல அமைச்சராக இருந்த போது ரூ. 15.45 லட்சம் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாக கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு, அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, சண்முகம் ஆகியோர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், மற்றொரு நபர் வெங்கட கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பரபரப்பு  தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்போது இந்திரகுமாரி  திமுகவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.