அதிமுக தர்மத்தை கடைபிடிக்கவில்லை...குற்றம் சாட்டிய கே.எஸ்.அழகிரி!

அதிமுக தர்மத்தை கடைபிடிக்கவில்லை...குற்றம் சாட்டிய கே.எஸ்.அழகிரி!

Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேர்தல் தொடர்பாக பிளவு ஏற்பட்ட அதிமுகவை முதலில் பாஜக சரிசெய்ய முயன்ற நிலையில், தற்போது அதிமுகவே பாஜகவை ஒதுக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

சொத்துவரி, மின் கட்டண வரி உயர்வால் இந்த தேர்தலில் எந்த விளைவும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட அவர், உலகில் தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருவதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com