சதி செய்தவர்களுக்கு தொண்டர்கள் தண்டனை வழங்குவார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க வில் சதி செய்தவர்களுக்கு. தொண்டர்களும் மக்களும் தண்டனை வழங்குவார்கள் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சதி செய்தவர்களுக்கு தொண்டர்கள் தண்டனை வழங்குவார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

சமீபத் தில் நடந்து முடிந்த அ. தி.மு.க., பொதுக்குழுவில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவ தியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி சென்று சென்னை திரும்பிய அவர், அங்கிருந்து இன்று மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத் தில் செய் தியாளர்களை சந் தித்து பேசிய ஓ. பன்னீர் செல்வம், இன்றுள்ள அசாதாரணமான சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது. எவரால் இந்த ச திவலை பின்னப்பட்டது என்பதற்கு கூடிய விரைவில், அவர்களுக்கு மக்களே நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் என குறிப்பிட்டார்.

தனது அரசியல் எ திர்காலத்தை மக்களும், அ. தி.மு.க., தொண்டர்களும் நிர்ணயிப்பார்கள் என குறிப்பிட்ட அவர், அ திமுக தொண்டர்கள் அனைவரும்  தன் பக்கம் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து தேனி செல்லும் அவருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உசிலம்பட்டியில் அ. தி.மு.க  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.