சசிகலாவை கட்சியில் சேர்ப்பதுகுறித்து ஓ.பி.எஸ் கூறியது சரியே- அதிமுக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன்

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பர் என ஓ.பன்னீர் செல்வம் கூறியது சரியானது என அதிமுகவின் அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

சசிகலாவை கட்சியில் சேர்ப்பதுகுறித்து ஓ.பி.எஸ் கூறியது சரியே- அதிமுக அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பர் என ஓ.பன்னீர் செல்வம் கூறியது சரியே என கூறினார். அ.தி.மு.கவின் எதிர்காலம் குறித்து சிந்திக்ககூடிய தலைமைக்கழக நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு. க தொண்டர்கள் யாரும் சசிகலாவை அவரது சுற்றுப்பயணத்தில் சந்திக்க மாட்டார்கள் என்றும் பிரபாகரன் கூறினார் தர்மயுத்தம் மூலம் இணையும்போது யாரையும் சேர்க்கக் கூடாது என சொன்னதை இப்போது ஒப்பிட முடியாது என்றும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என தாம் நம்புவதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார் .