அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு... இன்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்...

அதிமுகவின் பொன்விழா ஆண்டு இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு... இன்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்...

1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டு இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக கொடியை ஏற்றி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பங்கேற்க உள்ளனர். இதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

இந்த பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் மின்னொளியில் ஒளிர்கிறது.  வாசலில் பிரமாண்ட வாழை மரங்கள் கட்டப்பட்டு ரப்பர் யானை வரவழைக்கப்பட்டு அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம் செய்து எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட உள்ளது. பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.