"அதிமுக பொதுக்குழு விவகாரம்".. உயர்நீதிமன்றமே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

"அதிமுக பொதுக்குழு விவகாரம்".. உயர்நீதிமன்றமே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு:

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈ.பி.எஸ். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ்சை கட்சியிலிருந்து நீக்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இதனை எதிர்த்தும் பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்தார்.

ஈ.பி.எஸ். தரப்பு பதில்:

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவே நடத்த முடியாது என ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பது. இதற்கு பதிலளித்த ஈ.பி.எஸ். தரப்பு, பொதுக்குழுவுக்கே கட்சியின் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாக தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து விவகாரத்தையும் முந்தைய நிலைக்குக் கொண்டுவர உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றமே விசாரிக்கும்:

தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கே விசாரணைக்கு அனுப்புவதாகவும், 3 வாரத்தில் விசாரணையை நீதிமன்றம் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதுவரை இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com