அதிமுக - திமுகவினர் இடையே மோதல் : அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அதிமுக - திமுகவினர் இடையே மோதல் : அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

அப்போது குடிநீர் பராமரிப்பு பணிக்காக 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுகவினர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, நகர்மன்ற தலைவர் பதிலளிக்க மறுத்ததை அடுத்து அதிமுகவினர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி 13 அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.