தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!!

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!!
Published on
Updated on
1 min read

பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான   ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் சென்னையில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரத்தை கண்டித்தும், மாணவர் அமைப்பின் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வலியுறுத்தியும்  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அரியலூர்  மாணவி லாவண்யா  தற்கொலை செய்து கொண்டார்.  கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியே  மாணவியின் தற்கொலைக்கு  காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை  சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து  தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் டெல்லியில்  உள்ள  தமிழ்நாடு இல்லத்தை பாஜகவின் மாணவர் அமைப்பினர்  முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில், விடுதிக் காப்பாளரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவித்து உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com