பவானி ஆற்றின் திடீர் வெள்ளப்பெருக்கு சிக்கிய இளைஞர், இளம் பெண்.. பரபரப்பு!!

பவானி ஆற்றின் திடீர் வெள்ளப்பெருக்கு சிக்கிய இளைஞர், இளம் பெண்.. பரபரப்பு!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கிய இருவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திடீரென வெள்ளப்பெருக்கு

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் குண்டுக்கல் துறை பகுதியை சுற்றி பார்க்க இளைஞர் ஒருவர், இளம் பெண்ணுடன் வந்தார். அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டதால் இருவரும் ஆற்றில் இறங்கி விளையாடி கொண்டு இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

2 பேர் ஆற்றின் நடுவே சிக்கிகொண்டனர்

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் ஆற்றின் குறுக்கே இருந்த மரத்தின் மீது நின்று கொண்டனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் இளைஞரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, இளம்பெண்ணை பரிசல் மூலம் கரை சேர்த்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.