ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்....பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்....!!

திருப்பூர் மாவட்டம் அருகே ஆணாக மாறிய பெண்ணை, இளம்பெண் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்....பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்....!!

திருப்பூரை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தன்னுடம் வேலை செய்து வரும் பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஒரே கம்பெனியில் பணி புரியும் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரில் ஒருவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், மாற்றத்தால் பெண்ணாக இருந்த அவர் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நட்பாக பழகி வந்த தோழிகள் இருவருக்குள்ளும் காதல் வர ஆரம்பித்துள்ளது. காதல் வயப்பட்ட இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி கடந்த 8 ஆம் தேதி இருவரும் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் இருவரையும் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இருவரையும் போலீசார் விசாரித்தனர். அப்போது தாங்கள் இருவரும் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டோம் என கூறியதாக தெரிகிறது. அதனைதொடர்ந்து இருவருன் பெற்றோரையும் வரவழைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.