100 நாள் வேலை திட்ட பொறுப்பாளரின் பொறுப்பற்ற செயல்...பெண்களை தவறாக சித்தரித்த இளைஞர்!!

Published on

கள்ளக்குறிச்சி அருகே பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தாித்த இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

வீரசோழபுரம் கிராமத்தை சோ்ந்த வசந்தகுமார் என்பவா் அதே கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி தள பொறுப்பாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அவா் வேலைக்கு வரும் இளம்பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை ஆபாசமாக சித்தாித்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனை பழுது நீக்குவதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு செல்போன் கடையில் கொடுத்துள்ளாா். அப்போது செல்போனில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதை பாா்த்த கடைக்காரா் இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் தகவல் தொிவித்துள்ளாா். 

இதையடுத்து  வசந்தகுமாரை உடனடியாக கைது செய்யக்கோாி கிராம மக்கள் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மோகன்ராஜ் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் வசந்தகுமாரை கைது செய்யும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு  நிலவியது

இதனையடுத்து போலீசாா் வசந்தகுமாரை கைது செய்ததாக தொிவித்ததை தொடா்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். முன்னதாக  கிராம மக்களின் மறியல் போராட்டத்தால்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகினா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com