கார், பைக் வாங்குவோருக்கு ஒரு எச்சரிக்கை பதிவு…!

15 வருடங்களை தாண்டிய வாடகை வாகனம் மற்றும் 20 வருடத்தை தாண்டிய சொந்த வாகனத்தை பொதுமக்கள் யாரும் வாங்க வேண்டாம்  என திருநெல்வேலி வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர் ஜெயநிதி தெரிவித்துள்ளார்.

கார், பைக் வாங்குவோருக்கு ஒரு எச்சரிக்கை பதிவு…!

தற்பொழுது மத்திய அரசு சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த  சட்டம் அமலுக்கு வந்த பின்பு வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான பணம் வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும். ஆனால் தற்பொழுது சில தரகர்கள் ராயல் என்ஃபீல்ட் மற்றும் யமஹா போன்ற வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி 2 லட்சம் மற்றும் 3 லட்சம் ஆகிய அதிக விலைக்கு விற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், இவ்வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது என்பதால் மக்கள் யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய வாகனம் அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த  கவனத்துடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர் ஜெயநிதி தெரிவித்துள்ளார்.