தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி...!

சேலம் மாவட்டத்தில் 8 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி...!

சேலம் மாவட்டத்தில் 8 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சுதேசி இயக்கம் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக 8வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கைத்தறித்துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இந்த கண்காட்சியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் வெண்பட்டு வேஷ்டிகள், காட்டன் சேலைகள், பட்டுசட்டை துணிகள், பட்டு அங்க வஸ்திரம், பருத்தி வேஷ்டிகள், காட்டன் கொசு வலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த ஆடைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு கடனுதவி மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.