நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கைதியை கடித்த சாரைப்பாம்பு  

சென்னை புழல் சிறையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கைதி ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கைதியை கடித்த சாரைப்பாம்பு   

 சென்னை புழல் சிறையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கைதி ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை புழல் மத்திய தண்டனை சிறையில் சுமார் 850க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு காலை நேரங்களில் கைதிகள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். வழக்கம்போல் கைதிகள் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, சாரைப்பாம்பு ஒன்று உலா வந்துள்ளது. இதை பார்த்த பிலால் மாலிக் என்ற கைதி, பாம்பை கைதியில் பிடித்து விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு பிலால் மாலிக்கை கடித்துள்ளது.

உடனடியாக மற்ற கைதிகள், பிலால் மாலிக்கை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிலால் மாலிக் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.