திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதிக்கு கிடைத்த பரிசு வெள்ளி பேனா...!

திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதிக்கு கிடைத்த பரிசு வெள்ளி பேனா...!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி பேனா பாிசாக வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை ஆலங்குடியில் திமுக நிர்வாகி ரத்தினவேல் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படிக்க : ”ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அப்போது உதயநிதிக்கு ரத்தினவேல் குடும்பத்தினர் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி நினைவாக 3 அடி உயரத்திலான வெள்ளி பேனா சிலை பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதேபோல ஆலங்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, நினைவுச் சின்னமாக எய்ம்ஸ் செங்கலை ஆலங்குடி திமுகவினர் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.