தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி, உரிமை வழங்கலாம் எனத் தனித் தீர்மானம்.....

தலித் கிறிஸ்தவர்களுக்கு  எஸ்.சி, உரிமை வழங்கலாம் எனத் தனித் தீர்மானம்.....

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மக்கள் மன்ற மண்டபத்தில் தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கிறிஸ்துவ மதத்தை தழுவிய ஒரே காரணத்திற்காக கடந்த 72 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகைகளை பறித்ததோடு மட்டுமல்லாது கல்வி, வேலைவாய்ப்பு, கல்விஉதவித்தொகை, இடஒதுக்கீடு மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்ற அரசு சலுகைகள் முழுவதும் மறுக்கப்பட்டு வந்த நிலையில் இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தலித் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்து வாதாடி வருகின்ற நிலையில் மதம் மாறிய தலித் கிறிஸ்துவ மக்களின் பாதிப்புகளை புரிந்து கொண்டு தமிழக சட்டசபையில் தலித் மக்களுக்கு எஸ்.சி, உரிமை வழங்கலாம் எனத் தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க .ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு இந்த தீர்மானம் நிறைவேற்ற பரிந்துரை செய்ய காரணமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் சிந்தனைசெல்வன், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், சிறுபான்மை நலவாரிய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், அவர்களுக்கும் இந்த கூட்டத்தில் நன்றிதெரிவிக்கப்பட்டது

மேலும், வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற வேளையில் வருகின்ற 11 ஆம் தேதி விவாதத்திற்கு வருகின்றது இழந்த உரிமைகளை மீட்டெடுக்க புரட்சி பாதையில் விடியலை நோக்கி பயணிக்க இளைஞர் கருத்தரங்கமும் நடைபெற்றது. 

மாநில இளைஞரணி செயலாளர் அற்புதராஜ் தலைமையில் பாத்திமா பங்கு, பணியாளர் பால்ராஜ்குமார், கோடாங்குப்பம் திருத்தல அதிபர் தேவசகாயராஜ், எஸ்.சி,எஸ்.டி, பணிக்குழுசெயலாளர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் கருத்தரங்கில் ராபர்ட் பெஞ்சமின் வரவேற்பு உரையாற்றினார். ஆரோக்கியதாஸ் மாநிலத்தலைவர் நிகழ்வை துவக்கிவைத்தார். கரோலின், ஜூலியஸ், மேத்தா, மேரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தனர். துணைத்தலைவர் சந்தானதுறை, சிறப்புரை ஆற்றினார். தேசிய நிர்வாக உறுப்பினர் ஆனந்தராஜ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார். இதில்ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com