நீட் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அரசுப்பள்ளி மாணவர் சாதனை!!

நீட் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அரசுப்பள்ளி மாணவர் சாதனை!!

அறந்தாங்கி அருகே அரசுப்பள்ளி மாணவர் ஒருவர், நீட் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. அரசுப் பள்ளி மாணவரான இவர், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு, தேர்வு எழுதினார்.

இந்நிலையில், தமிழக அரசின் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.