தனியார் பள்ளி வேன் டயர் வெடித்து வயலில் கவிழ்ந்து விபத்து

தனியார் பள்ளி வேன் டயர் வெடித்து வயலில் கவிழ்ந்து விபத்து

Published on

திருவிடைமருதூர் அருகே தனியார் பள்ளி வேன் டயர் வெடித்து வயலில் கவிழ்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருமங்கலக்குடி மெயின் ரோட்டில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இன்று மாலை பள்ளி விட்டதும் பள்ளி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியார் வேன் திருலோகி அருகே சென்று கொண்டிருந்தது வேனில் 11 குழந்தைகள் இருந்தனர். 

திருமங்கலக்குடி பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் வேலை ஓட்டி சென்றார். நெடுந்திடல் அருகே சென்ற போது வேனின் டயர் வெடித்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விரைந்து வந்து வேனில் இருந்து குழந்தைகளை மீட்டனர். 

சிறுசிறு காயங்களுடன் இருந்த குழந்தைகள் ஹரிணி, பூஜா, கிரிதரன், தருண், விஷ்வா, மிதுன், வீரபிரபு, ஷெர்லின் ஆகிய எட்டு பேரும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர் ஹரிணி என்ற நான்காம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com