சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்.. தனியார் பேருந்தால் பறிபோன உயிர்!!

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்.. தனியார் பேருந்தால் பறிபோன உயிர்!!

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சாலையில் தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்பட்டு அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மேட்டுபாளையம் சாலையில் ஊட்டியை சேர்ந்த போஜன் என்பவரது மனைவி பார்வதி (62) என்ற மூதாட்டி சாலையை கடக்க முயன்றார். அப்போது, மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது.

பேருந்து மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது தனியார் பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் சிக்கி ஒரு உயிர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.