மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்... ஒருவர் உடல் கருகி பரிதாப பலி...

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணமடைந்தார்.

மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த கார்... ஒருவர் உடல் கருகி பரிதாப பலி...
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணமடைந்தார். காரை ஓட்டி வந்தவர் படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் பெயர் அர்ஜுனன் (48) என்பதும், வேலப்பன்சாவடியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. காரை ஓட்டியவர் சுனில்குமார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விபத்துக்காரணம் என்ன என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த திடீர் விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.