"485 கோடி".. அங்கிருந்து இங்கு வரை உயர்மட்ட சாலை.. எங்கிருந்து எங்கு வரை தெரியுமா? - சட்ட பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு கூறியது என்ன?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு அறிவித்துள்ளார்.

"485 கோடி".. அங்கிருந்து இங்கு வரை உயர்மட்ட சாலை.. எங்கிருந்து எங்கு வரை தெரியுமா? - சட்ட பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு கூறியது என்ன?

தமிழக சட்டப்பேரவையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலு பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 117 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

சென்னை ஓ.எம்ஆர் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், இந்த பாலப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அறிவித்த அமைச்சர் எ.வ.வேலு, மேடவாக்கம் - வேளச்சேரி - தாம்பரம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் இரண்டொரு நாட்களில் முதலமைச்சரின் அனுமதி பெற்று திறந்து வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.