பொன்னமராவதி அருகே பேக்கரியில் தீ விபத்து...2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்...!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பொன்னமராவதி அருகே பேக்கரியில் தீ விபத்து...2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்...!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் சந்தைப் பேட்டையில் செந்தில் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். அந்த பேக்கரியில் இன்று காலை  8.00 மணி அளவில் சிலிண்டர் குழாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ அணையாமல் பரவி, பேக்கரியில் உள்ள ஷோகேஸ், மின்சாதன பொருட்கள், பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் உட்பட சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் கடையின் உரிமையாளர் செந்தில் மற்றும் ஊழியர் வேலுசாமி ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த இருவரும் காரையூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால்  அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது.