ஒரே நாளில் 76,400 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை முழுவதும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வழக்கில் ஒரே நாளில் 76 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 76,400 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை முழுவதும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வழக்கில் ஒரே நாளில் 76 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஒரே நாளில்  76 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக அதிகபட்சபாக சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 17 ஆயிரத்து 500 ரூபாயும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 9 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.