பழி வாங்கும் எண்ணத்தில் இபிஎஸ் மீது பொய் வழக்கா...?!!

பழி வாங்கும் எண்ணத்தில் இபிஎஸ் மீது பொய் வழக்கா...?!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிட இயக்க தலைவர் சுப வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதை பித்தன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஆர். கே. கலைமணி மற்றும்  நகர் மன்ற துணைத் தலைவர் முத்து, நகரக் கழகச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழிவாங்கும் எண்ணமா?:

அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முக்கியமான செய்தி தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பகுதிகளில் மாவட்டங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எனவும்  ஏனென்றால் தாங்கள் அவர்களை 22 மாதமாக விட்டு விட்டதாகவும் அவர்களை கைது  செய்து சிறைச்சாலையில் போடவில்லை எனவும் பழி வாங்குற போக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிக்கு இல்லை எனவும் பேசினார்.

மேலும், ஆகவே தான் ஒருவர் மேலே வழக்கு போட்டால் அதை ஆதாரத்தோடு தான் போட வேண்டும் என்பது முதலமைச்சர் தளபதியோட விருப்பம் எனவும் பொய்  வழக்குகள் போடக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொய் வழக்கா?:

எடப்பாடி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்று கூறுகின்றனர் எனக் கூறிய அவர் ஏங்க இதுக்கும் அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.  அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இண்டிகா விமானத்தில் பயணம் செய்கிறார் எனவும் அவருடன் அதே விமானத்தில் அ.ம.மு. க கட்சியைச் சேர்ந்த நிர்வாகியும் உடன் பயணிக்கிறார் எனவும் தெரிவித்த அமைச்சர் அவருடன் பயணித்த அந்த நபர் அவரது  முகநூலில் துரோகி பழனிச்சாமி என்று பதிவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தாக்கப்பட்ட நபர்:

அந்த பதிவினை பழனிச்சாமி உடன் வந்த நபர் பார்த்தவுடன் பதிவிட்டவரை அடித்துள்ளார்கள் எனக் கூறிய அமைச்சர் அவர் என்ன பொய்யான தகவலை பதிவிட்டுள்ளார் எனவும் கேள்வியெழுப்பினார்.  மேலும் பழனிச்சாமி அவர்கள் காலில் விழுந்து பாம்பு போல ஊர்ந்து  சென்று பதவி பெற்ற உண்மையைத்தானே கூறியுள்ளார் எனவும் பொய் சொல்லவில்லையே அதற்குத்தான் இந்த உத்தம புத்திரனுக்கு கோபம் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

புகார் அளிக்கவில்லை:

அந்த பதிவு செய்த நபரை அடித்ததோடு மட்டுமல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி கண் காண்பித்ததும் அவரை நைய புடைத்துள்ளார்கள் என்பது அங்குள்ள வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது எனவும் ஆதாரம் இருக்கிறது எனவும் அந்த அடி வாங்கிய நபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் எனவும் கூறினார்.

மேலும் நாங்கள் அந்த புகாரை கொடுக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி  தூண்டி விட்டதற்கான ஆதாரம் இருந்ததால் வழக்கு பதிவு பதியப்பட்டுள்ளது எனவும் இது பொய்யான வழக்கா என்று சட்டத்துறை அமைச்சர் பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:   தகராறு செய்ததால்தான் அதிமுகவினர் மீது...!!!