தமிழகத்திலேயே முதன்முதலாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளில் போதைத் தடுப்புக் குழு அமல்!!

தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைத் தடுப்பு குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே முதன்முதலாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளில் போதைத் தடுப்புக் குழு அமல்!!

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் போதை பொருளில்லா பாரதம் என்ற திட்டம் நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையொட்டி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் காணொலிக் காட்சி வாயிலாக இணைக்கப்பட்டு ஆட்சியர் விஷ்ணு தலைமையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Say No to Drug and Yes to Life அல்லது Drug Free India என்ற தலைப்பில் டிஜிட்டல் போஸ்டர் தயார் செய்வதற்கான மாதிரி படைப்புகள் தயாரிக்க மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஷ்ணு,  தமிழகத்திலேயே முதன்முறையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் என்எஸ்எஸ், என்சிசி போன்று போதை தடுப்புக்  குழு, என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்றும் 14446, 1098 என்ற போதை தடுப்பு விழிப்புணர்வு எண்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..