100 ரூபாய்க்கு இவ்வளவு தான் பெட்ரோல் போடுவியா...? பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்..!

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 100 ரூபாய்க்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
100 ரூபாய்க்கு இவ்வளவு தான் பெட்ரோல் போடுவியா...? பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்..!
Published on
Updated on
1 min read

சிதம்பரம் கஞ்சித்தொட்டி பேருந்து நிலையம் எதிரே இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார். அப்போது, பெட்ரோல் குறைவாக உள்ளதை அறிந்த வாடிக்கையாளர் வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து தருமாறு ஊழியரிடம் கேட்டார்.

தொடர்ந்து குழாய் மூலம்  பெட்ரோலை எடுத்து பார்த்தபோது, அதில் 30 ரூபாய் அளவிற்கு மட்டுமே பெட்ரோல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com