கல்லூரி மாணவர் விபத்தில் காலமானார்...!

கல்லூரி மாணவர் விபத்தில் காலமானார்...!
Published on
Updated on
1 min read

ஈரோடு அருகே  நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் இறந்ததையடுத்து, அரசு பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான கவின்ராஜ் மற்றும் வினோத் குமார் இருவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்பொழுது, ஈரோட்டில் இருந்து கோவையை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த மற்றொரு மாணவன், தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் மீது அரசு பேருந்து மோதியதையடுத்து, அங்கு திரண்ட கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் அரசு பேருந்தினை அடித்து நொறுக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேசமயம், சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com