திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதி விபத்து...!

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதி விபத்து...! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்...!

திருச்செந்தூர் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதி விபத்து...!

தூத்துக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் பீட்டர்- வசந்தி. இவர்கள் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என சுமார் 20 பேர் வேன் மூலம் திருச்செந்தூர் அருகில் உள்ள மனப்பாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் வேன் திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் உள்ள குலசேகரபட்டினம், உடன்குடி சந்திப்பு அருகே சென்றபோது, உடன்குடியில் இருந்து குலசேகரபட்டினம் நோக்கி வந்த, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் என்று பலகை பொருந்திய இன்னோவா கார், வேன் மீது மோதியது. இதில் வேன் தலைகீழாக கவிழ்ந்து. 

தொடர்ந்து கார் மற்றும் வேனில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த குலசேகரப்பட்டினம் காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, முக்கிய சாலையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக,  திருச்செந்தூர் முதல் மணப்பாடு வரை சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும், குலசேகரபட்டினம், உடன்குடி மற்றும் கன்னியாகுமரி- திருச்செந்தூர் சாலையின் நான்கு வழி சந்திப்பின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்புகள் சாலை சீரமைப்புக்காக அகற்றப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் அந்த தடுப்புகளை ஆமிக்காதது தான் இந்த விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து குலசேகரப்பட்டினம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.