துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெறும் சிறுவன் : பெற்றோருக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல்

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் 11 வயது சிறுவனின் பெற்றோருக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல் கூறினார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெறும் சிறுவன் : பெற்றோருக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, 11 வயது சிறுவன் புகழேந்தி என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சையின் விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை க்காக நிதி உதவியும் வழங்கினர், பின்னர் பேட்டியளித்த அமைச்சர், மெய்யநாதன் மாணவனுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஓரளவு குணமாகி வரும் நிலையில் இருக்கின்றார் என்றும், புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும்,  தமிழக முதல்வர் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் அடிப்படையில் 95 சதவீதத்திற்கும் மேலாக விளையாட்டு வீரர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களது பயணம் தொடர்கிறது என்று தெரிவித்தார்.