"2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாட்டிற்கு சர்வாதிகார ஆட்சி தான்" ஆ. ராசா பேச்சு!

"2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாட்டிற்கு சர்வாதிகார ஆட்சி தான்" ஆ. ராசா பேச்சு!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநில ஆட்சிகள் தொடர முடியாத நிலை ஏற்படும் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநில ஆட்சிகள் தொடர முடியாத நிலை ஏற்படும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வருவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கும் இதுவரை பிரதமர் ஒரு முறை கூட பதில் அளிக்காதது பெரும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் பேசினார்.

மேலும் திமுக மீது பழி சுமத்தும் வகையில் திமுக என்றாலே ஊழல் தான் என்று எதிர்க்கட்சிகள் பேசி வருவதாகவும், அதனை நிரூபிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ED ரெய்டு சோதனையை கையாண்டு வருவதாகவும், தற்போதும் கூட அமைச்சர் ஏ.வா வேலு சம்பந்தப்பட்ட இடங்களில் ED ரெய்டு நடத்தி கட்டு கட்டாக பணத்தை பறிமுதல் செய்ததாக கூறி வருவதாகவும் அந்த பணத்தை வெளியில் காட்ட வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

மேலும் அதானி வெளிநாடுகளில் தொழில்கள் செய்வதற்காக முதலீடு செய்யும் பணம் எல்ஐசி மற்றும் ONGC ஆயில் நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்வதாகவும் அமெரிக்காவில் உள்ள ஒரு செய்தி நிறுவனம் இச்செயலில் ஈடுபடும் அதானி ஒரு பிராடு என குறிப்பிட்டுள்ளதாகவும், அதானியை வெளிநாடுகளில் தொழில் அழைத்து சென்ற பிரதமர் மோடியும் ஒரு பிராடு என அவர் பேசினார்.