திராவிட மாடலா ? தமிழ் மாடலா ?விவாதம் நடத்த தயார்...ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

திராவிட மாடலா ? தமிழ் மாடலா ?விவாதம் நடத்த தயார்...ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தேதியும் நேரமும் அறிவித்தால் அவருடன் பல்வேறு கருத்துகள் குறித்து நேரடி விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திராவிட மாடலா?- தமிழ் மாடலா ? விவாதம் நடத்த தயார்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முடிந்த பிரதமர் நரேந்திர மோடியின் 72 -வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசின் நலத்திட்ட பிரிவுகளின் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட மாடலா?- தமிழ் மாடலா ? என்பதில் திமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் நேரடியாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக கூறினார். அதே போன்று, தமிழக வரலாறு குறித்து விவாதிக்க தயாரா என அமைச்சர் பொன்முடி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்த நிலையில், விவாதிக்க தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை:

இதேபோல் திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் தொடர்பாகவும் திமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் நேரடி விவாதம் நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் நேரம் ஒதுக்கினால் அவருடன் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை சவால் விடுத்து பேசினார்.