வெந்நீர் கொட்டியதில் 6 மாத குழந்தை உயிரிழப்பு...!

வெந்நீர் கொட்டியதில் 6 மாத குழந்தை உயிரிழப்பு...!
Published on
Updated on
1 min read

வெந்நீர் கொட்டியதில், சென்னையை சேர்ந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அரும்பாக்கம் ஜெகந்நாதன் நகரை சேர்ந்த பரத்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி குளிப்பதற்காக வெந்நீர் போட்டு எடுத்து செல்லும் போது எதிர்பாராத விதமாக அவரது 6 மாத குழந்தை ஹரிஹரன் மீது வெந்நீர் கொட்டியது. 

இதில் 40 சதவீதம் அளவிற்கு படுகாயமடைந்த குழந்தை ஹரிஹரனை மீட்ட பெற்றோர்  சிகிச்சைக்காக நூங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தது. 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வெந்நீர் கொட்டியதில் 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com