ஒரே நாளில் 9 கொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குற்றம் சாட்டும் இரட்டை இலையினர்.......

ஒரே நாளில் 9 கொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது  குற்றம் சாட்டும் இரட்டை இலையினர்.......

ஒரே நாளில் ஒன்பது கொலை

காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் செயல்படாமல் இருக்கிறார்: ஒரே நாளில் ஒன்பது கொலை நடந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது_ சென்னையில்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பாராட்டு விழா 

ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது அந்த விழாவில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது, சி பி ஆர் ஆளுநராக பொறுப்பேற்க இருப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பாராட்டு தெரிவிக்கிறோம்.
பார்க்கும் போது எல்லாம் கலகலப்புடன் பேசக்கூடிய  என் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க | தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மீண்டும் கன்டிசன் போடும் உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை

நீதி மன்ற வளாகத்திலேயே கொலை நடந்து இருப்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை சுதந்திரமாக யாரும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏ டி எம் கொள்ளை, வழிப்பறி கொள்ளை நடக்கிறது. காவல் துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது. உள் துறை அமைச்சர் முதலமைச்சர் காவல் துறையினர் முடிக்கி விட்டு செயல்பட விட  வேண்டும்.
காவல் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் செயல்பட வில்லை.

குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

ஒரே நாளில் ஒன்பது கொலைகள், நீதிமன்ற படுகொலைகள் இல்லை. உள்துறை அமைச்சராக அவர் என்ன செய்கிறார்.குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நடந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எங்கள் ஆட்சியில் இது போல் மோசமாக இல்லை.

ஜில் ஜில் ரமாமணி

ஜில் ஜில் ரமாமணி என அதிமுக வை துரை முருகன் பேசி இருப்பது  குறித்து , தில்லான மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் வைத்தி கதாபாத்திரம் போல் தான் அவர்கள் ஒரு ஒரு பக்கம் மாற்றி பேசுவார்கள் என்றும் தெரிவித்தார்.