9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 26 காவல் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு...

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 26 காவல் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 26 காவல் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு...

அதன்படி மாநில மனித உரிமைகள் ஆணைய காவல் கண்காணிப்பாளராக சாந்தியும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக கிங்ஸ்லினும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ். பி.யாக ஐ. பி.எஸ். அதிகாரி பொன்னியையும், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ். பி.யாக சண்முகப் பிரியாவையும் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு,மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ். பி.யாக சுஜித் குமாரையும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சேலம் மண்டல எஸ். பி.யாக மகேஷ்குமாரையும் நியமித்துள்ளது.

இதைப்போல, காவல்துறை தலைமையக உதவி ஐ.ஜி.யாக துரையும், சென்னை ரெயில்வே காவல்துறை எஸ். பி.யாக தீபா சத்யனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக தங்கவேல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ். பி.யாக பெருமாள் உள்பட மொத்தம் 26 காவல் அதிகாரிகளை, தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.