பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. தலைவர்கள் மரியாதை..!

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள்  கொண்டாட்டம்.. தலைவர்கள் மரியாதை..!

பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள்:

பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 87-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு சிவந்தி ஆதித்தனாரின் குடும்ப உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசியல் தலைவர்கள் மரியாதை:

தொடர்ந்து, தமிழக சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழ்மாநில கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினர்.