அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு! எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு! எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!!
Published on
Updated on
1 min read

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், முதலில் மருத்து மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை விசாரிக்கலாம் என்றும் அதன் பின் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கை முடிவு செய்யலாம் என தெரிவித்தார்.  மனுதாரர் தரப்பில், வழக்கில் விரிவாக வாதிட  காலஅவகாசம் கேட்கபட்டதையடுத்து வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com