கைதிகளின் மோதலில் ஒருவர் மரணம்,.70 நாட்களாக தொடரும் போராட்டம்,. விசாரணை நடத்த உத்தரவு.! 

கைதிகளின் மோதலில் ஒருவர் மரணம்,.70 நாட்களாக தொடரும் போராட்டம்,. விசாரணை நடத்த உத்தரவு.! 

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் முத்துமனோ உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய புலனாய்வு  பிரிவு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஏப்ரல் 22 ம் தேதி முத்து மனோ என்ற சிறைக் கைதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சம்பவப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முத்துமனோவின் உறவினர்கள் தொடர்ந்து அவரின் உடலை வாங்காமல் 70 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களும் இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.  

இந்நிலையில் இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் கடந்த ஏப்ரல் 23ம் தேதி தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து சிறைத்துறை தலைமை இயக்குனரிடம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமை ஆணையம் சிறைத்துறை தலைமை இயக்குனர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவு முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.