7 பேர் விடுதலை உறுதி: சொல்வது சீமான்

7 பேர் விடுதலை உறுதி: சொல்வது சீமான்

7 பேர் விடுதலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இயக்குனர் பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக தலா 5 லட்சம் ரூபாயை வழங்கினர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கொரோனா தடுப்பு பணிகளில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். 

7 பேர் விடுதலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், 7 பேர் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்புக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். மேலும், பள்ளி  மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.