60 வயது மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை ... நகைக்காக கொலை செய்யப்பட்டாரா?

கிருஷ்ணகிரி அருகே 4 சவரன் நகைக்காக 60 வயது மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்ய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயது மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை ... நகைக்காக கொலை செய்யப்பட்டாரா?

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்த நெடுமருதி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவரது மனைவி சூடம்மா. 65 வயதான இவர் தனது மகன், மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில்  நேற்று  இரவு வழக்கம் போல் சூடம்மா வீட்டுக்கு வெளியே தூங்க சென்றதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் காலையில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் தூங்கிய சூடம்மாளை பார்க்க வந்தபோது, அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகையும் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை குறித்து அருகில் இருந்தவர்கள் குருபரப்பள்ளி போலிசாருக்கு   தகவல் அளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குருபரபள்ளி போலிசார் சூடம்மாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூடம்மா நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என குருபரபள்ளி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.