தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள 6 மாவட்டங்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள 6 மாவட்டங்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மத்திய அரசு மூலம் முயற்சி மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  செந்தில்ராஜ் தலைமையில்,  உப்பு உற்பத்தி செய்வது,  வினியோகம் செய்வது குறித்து உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்  கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி,நாகப்பட்டினம், ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.