தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: கதறி அழுத மூதாட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தெரு நாய் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: கதறி அழுத மூதாட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உ.செல்லூர் கிராமத்தில் வசிக்கும் கொடியான் மனைவி சின்னப்பிள்ளை வயது 60 என்ற ஏழை மூதாட்டி 15 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் மூதாட்டி தினந்தோறும் ஆடுகளை மேச்சலிட்டு பிறகு மாலை நேரத்தில் ஆடுகள் அடைக்கும் பட்டியில் அடைத்து இரவு நேரத்தில் ஆட்டு  பட்டியின் அருகே உள்ள விட்டு வீட்டில் சப்பிட்டு விட்டு பின்னர் ஆட்டு பட்டியில் காவலுக்கு படுத்து கொள்வது வழக்கம். ஆனால் நேற்று இரவு மழை வந்ததால் மூதாட்டி சின்னப்பிள்ளையானவர்   ஆடுகளை நன்கு பட்டியில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டனர்.

பிறகு இன்று காலை ஆட்டுப் பட்டிக்கு சென்று பார்த்தபோது 10- மண் மேற்கொண்ட வெறி நாய்கள் ஆட்டுப் பட்டியில் இருந்து ஓடியதை பார்த்ததும் அதிர்ந்து போய் ஆட்டுப் பட்டியின் உள்ளே பார்த்தனர். அப்போது 6 ஆடுகளை வெறி நாய் கடித்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது. 7 ஆடுகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் இரண்டு ஆடுகள் என்னானது என்று தெரியவில்லை.

இதனால் மூதாட்டி இறந்துபோன ஆடுகளை பார்த்தும், படுகாயம் அடைந்த ஆடுகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதனால் ஏழை ஆடுகளை வைத்து ஜீவனம் செய்யும் மூதாட்டி அரசு முன் வந்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு ரூபாய் 2 லட்சம் உதவி செய்தாள் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.