மண் எடுப்பதற்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் தர வேண்டும்... தனியார் நிறுவனத்தை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மண் எடுப்பதற்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் தர வேண்டும்... தனியார் நிறுவனத்தை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் தனியார் இடத்தில் மண் எடுப்பதற்கு யூனிட்டுக்கு 500 ரூபாய் தர வேண்டும் என வலியுறுத்தும் தனியார் நிறுவனத்தை கண்டித்தும் அதற்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டித்தும் சிஐடியு லாரி உரிமையாளர் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி சொந்தமான ஏரி, குளங்கள் ஆகியவற்றில் மண் எடுப்பதற்கு யூனிட் ஒன்றுக்கு 500 ரூபாய் ராயல்டி தரவேண்டும் என புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் வற்புறுத்துவதாகவும்,  இல்லையென்றால் மண் எடுக்க முடியாது என மிரட்டுவதாக கூறி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண் மணல் லாரி உரிமையாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏலம் எடுத்த குவாரிகளை இயக்க விடாமல் தடுத்து வருவதாகவும் குண்டர்களை வைத்து ராயல்டி கேட்டு மிரட்டி வருவதாகவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.