500 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்  

திண்டுக்கல் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 500 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

500 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்   

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் இந்திய அரசால் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வகை ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை உண்டால் புற்றுநோய் மற்றும்  உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். . ஆலைக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் உண்டு வளரும் இந்த வகை மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் உள்ளதாக கூறும் மருத்துவர்கள், எனவே இந்த வகை மீன்களை உண்ணும் நபர்களின் ரத்ததில்  அதிகளவில் உலோகங்கள் சேர்ந்து அதனால் புற்றுநோய் மற்றும் உடல் உபாதைகள் உருவாகும் ஆபத்து அதிகமாவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கு சொந்தமான  மீன் மார்கெட்டில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞானம் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி  சிவராம் பாண்டியன் தலைமையில் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய 500 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும்   மீன் மார்கெட்டில் உள்ள பல கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த அழுகிய மீன்களையும் பறிமுதல் செய்தனர்.